News
உடல் எடையை குறைத்து ஏன்..? மனம் திறந்த நடிகை வரலட்சுமி.!
நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது சந்தோஷுக்கு ஜோடியாக நடித்துள்ள ” கொன்ரால் பாவம்” கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது என்றே கூறலாம். வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை செய்து வருகிறது.

Varalaxmi Sarathkumar [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷனுக்காக நடிகை ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது தொகுப்பாளர் நீங்கள் உடல் எடையை குறைத்து ஏன்..? என்று கேட்டார்.

Varalaxmi Sarathkumar [Image Source: Twitter]
அந்த கேள்விக்கு பதில் அளித்த வரலட்சுமி ” ஒரு நடிகை இப்படித்தான் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. எடை அதிகமாக இருந்ததால் சில பிரச்சனைகளை சந்தித்தேன். இதன் காரணமாக தான் நான் என்னுடைய உடல் எடையை குறைத்தேன்.
இதையும் படியுங்களேன்- ஸ்கிரிப்ட் வேலைகள் பினிஷ்…அடுத்த சம்பவத்திற்கு தயாரான எச்.வினோத்.!

Varalaxmi talk [Image Source: Twitter]
அதைபோல் தெலுங்கு சினிமாவிழும் எனக்கு பட வாய்ப்புகள் வருகிறது. எனவே அதற்காகவும் எடையை குறைத்துள்ளேன். வேறு யாருக்காகவே நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யாமல் இருக்காதீர்கள். உங்களுக்கு பிடித்ததை மட்டும் செய்யுங்கள்” என கூறியுள்ளார்.
