Connect with us

Videos

Women’s Day: ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு.!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

Ponniyin Selvan 2 Special Trend 2 [Image Source: Twitter]

தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ப்ரோமோஷன் பணிகள் ஏற்கனவே, தொடங்கிவிட்டது. அதன்படி, படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று, Women’s Day என்பதால் அதனை முன்ட்டு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

Ponniyin Selvan Womens Day [Image Source: Twitter]

அந்த வீடியோவில், பொன்னியின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள பெண் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு வகையும் காட்சிப்படுத்தி மொத்தமாக வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்களேன் –  ஏப்ரல் 14-ல் சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் – டைட்டில் ரிலீஸ்.?

Ponniyin Selvan 2 1st Single and teaser [Image Source: Twitter]

இந்த மாதம் முழுவதும் இப்படத்தின் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெறவுள்ளது.   அந்த வகையில், ஏப்ரல் 4ஆம் தேதி இப்படத்தின் பிரம்மாண்ட இசைவெளியிட்டு விழா நடைபெற இருக்கிறதாம். மேலும், இந்த விழாவில் முக்கியமான பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top