16.9 C
London
Friday, July 12, 2024

குவைத்தில் 6 மாடி குடியிருப்பில் தீ விபத்து: 41 பேர் உயிரிழப்பு, 10 இந்தியர்கள் உட்பட

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

குவைத் நாட்டின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், மேலும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர். இதில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கியிருந்தனர். சமையலறையில் ஏற்பட்ட தீ வேகமாக கட்டிடத்தின் வழியாக பரவியதால், பலர் உள்ளே சிக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அதான், ஜாபர் மற்றும் முபாரக் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here