Celebrities
ஆமா, எப்பொழுதும் நான் சுயநலவாதி தான்; மதர் தெரசா கிடையாது..!
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் கலந்து கொண்ட நிலையில், இதில் ஒரு போட்டியாளராக வனிதா விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களுடன் ஆரம்பத்திலிருந்தே வாக்குவாதம் மற்றும் சண்டையில் ஈடுபட்டு வந்த வனிதா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக நிகழ்ச்சியை விட்டு தானாகவே வெளியேறினார்.
வனிதா வெளியேறியதற்கு பின்னதாக பல விமர்சனங்கள் எழுந்து வந்தது. கமல் சார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுக்க போகிறார் என்பதால் வனிதா வெளியேறி விட்டார் என்று பேசப்பட்டது. வனிதாவுக்கு அங்கிருந்து பேசத் தெரியவில்லை, தேவையில்லாமல் பிரச்சனை மட்டும் தான் பண்ண தெரிகிறது என்ற பேச்சும் கிளம்பியது.
இதையும் படியுங்களேன் … ஆபாசக்காட்சி எடுத்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.! சீறி பாய்ந்தது போக்ஸோ வழக்கு.!
ஆனால், வனிதா எதையும் கண்டுகொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் வெளியில் வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில், நீங்கள் உங்கள் ரசிகர்களை ஏமாற்றி விட்டு வெளியேறி விட்டீர்கள் அது சுயநலமாக தெரியவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள வனிதா, ஆமாம் நான் எப்பொழுதுமே சுயநலவாதி தான். நான் ஒன்றும் மதர் தெரசா கிடையாது. எனக்கு எது சரி என்பதை தான் பார்ப்பேன் என வனிதா கூறியுள்ளார்.
