News
யோவ் என்னய்யா இது..? ரொம்ப கொடூரமா இருக்க… பஹத்பாசிலை பார்த்து நடுங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்…
சினிமாவில் வில்லனாக நடிக்கவேண்டும் என்றால் பெரிய அளவில் உடல் அமைப்பை கொண்டிருக்கவேண்டும், பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருக்க வேண்டும் என பலரும் கூறுவது உண்டு. ஆனால், நார்மலான உடலை வைத்துக் கொண்டு தன்னுடைய கண்களிலே வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கி வருபவர் நடிகர் பஹத் பாசில்.

FahadhFaasil [Image Source : Twitter /@dp_karthik]
இவர் ஹீரோ, வில்லன் என எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் கலக்கி விடுவார் என்றே கூறலாம். குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Fahadh Faasil [Image Source : Twitter /@letscinema]
மாமன்னன் படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

arr and fafa [Image Source : File Image ]
இதற்கிடையில், பஹத் பாசிலை பார்த்து ஏ.ஆர்.ரஹ்மான் பயந்த சம்பவம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மாமன்னன் படத்தின் பின்னணி இசையமைக்கும்போது முழுவதுமாக ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துள்ளாராம். அப்போது பஹத் பாசிலின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து நடுங்கிவிட்டாராம்.

ar rahman and fafa [Image Source : File Image ]
பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் பஹத் பாசிலை தொடர்புகொண்டு மாமன்னன் படம் பார்த்தேன் ரொம்ப பயமாக இருந்தது. இப்படியே வில்லன் கதாபாத்திரங்களே படங்களில் நடிக்காதீங்க எல்லாருக்கும் உங்கள் மேல் ஒரு பயம் வந்துவிடும். ஹீரோவாகவும் நிறைய படங்கள் நடியுங்கள்” என அட்வைஸ் செய்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த தகவலை தான் மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
