News
உங்க மனசு ரொம்ப பெருசு.! பிரச்சனை இருந்தும் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்த எம்ஜிஆர்..!!
எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் அனைத்தும் என்றும் காலத்தால் அழிக்கமுடியாத வகையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில், எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் அவர் பலருக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அப்படி அவர் செய்த பல உதவி செய்த தகவல்களை பல சினிமா பிரபலங்கள் பல பல பேட்டிகளில் கூறி நம்ம பார்த்திருப்போம்.

MGR [Image Source : File Image ]
அந்த வகையில், அப்படித்தான் பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் எம்ஜிஆர் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா ” எம்ஜிஆருக்கும் சந்திரபாபுவுக்கும் பெரிய தகராறு நடந்தது.சந்திரபாபு ஆரம்ப காலகட்டத்தில் ‘மாடி வீட்டு ஏழை’ எனும் ஒட்டு திரைப்படத்தை எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க முடிவு செய்து படம் ஷூட்டிங் வரை சென்றது.

ramesh khanna [Image Source : File Image ]
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது இரண்டே நாட்களில் இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. இருவரும் அத்துடன் பிரிந்து விட்டார்கள். பிறகு எம்.ஜி.ஆர். சந்திரபாபு பற்றி திட்டுவதும் சந்திரபாபு எம்ஜிஆரை பற்றி திட்டுவதும் என பெரிய பிரச்னையாக போய்கொண்டிருந்தது. பிறகு சில காலங்களாக சந்திரபாபு படவாய்ப்புகளை இழந்து ஆளே காணாமல் போய்விட்டார். பிறகு அடிமைப்பெண் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் யாரெல்லாம் நடிக்கவேண்டும் என்ற லிஸ்டை எழுதிக்கொண்டிருந்தார்கள்.

mgr and chandrababu [Image Source : File Image ]
அப்போது அந்த சமயத்தில், மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களை தேர்வு செய்யலாம் என பலருடைய பெயரை எழுதினார்கள். அப்போது அந்த பெயர்களை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் எதற்கு சந்திரபாபு பெயரை நீங்கள் போடவில்லை என்ற கேட்டார். அதற்கு, படக்குழுவினர் இல்லை சார் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனை அவரை உங்களுக்கு பிடிக்காது என கூறினார்கள்.

chandrababu and mgr [Image Source : File Image ]
அதற்கு, எம்ஜிஆர் எனக்கு பிரச்சனை, பிடிக்காது என்பது எல்லாம் விடுங்க…அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறது, எனவே அவர் இந்த திரைப்படத்தில் கண்டிப்பாக நடிக்கவேண்டும் அவருடைய பெயரை எழுதிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். பிறகு தான் எம்ஜிஆருடன் சந்திரபாபு அடுத்ததாக பல படங்களில் நடித்துள்ளார்கள்” என இந்த தகவலை நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் உங்க மனசு ரொம்ப பெருசு எனவும், எம்ஜிஆர் ஒரு பெரிய லெஜண்ட் எனவும் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.
