முதன் முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் யுவன்..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தலைவர் 171’.?
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா பெரிய ஹீரோ, சிறிய ஹீரோ என பார்க்காமல் தன்னை தேடி வரும் அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து வருகிறார். பல ரசிகர்களை இசையால் கட்டிப்போட்டிருக்கும் யுவன் இதுவரை டாப் நடிகர்களான கமல், ரஜினி ஆகியோரின் படங்களுக்கு இசையமைத்ததே இல்லை.

Yuvan Shankar Raja Smile [Image Source: Twitter]
இவர்கள் இருவரின் ஒரு படத்துக்காகவது யுவன் இசையமைப்பாரா என்பது தான் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த வகையில், ரஜினி படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன்- தியேட்டரில் ரசிகர்களை பதம் பார்த்த 2022 பிளாப் லிஸ்ட் படங்கள்…!

Pradeep Ranganathan Rajinikanth [Image Source: Twitter]
அதன்படி, ரஜினியின் 171-வது திரைப்படத்தை பிரபல இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே லவ் டுடே படத்தை பார்த்து விட்டு பிரதீப்பை ரஜினி பாராட்டியுள்ள நிலையில், அவரிடம் ஒரு கதை ஒன்றையும் ரஜினி கேட்டுள்ளாராம்.

Thalaivar 171 U1 And Rajinikanth [Image Source: Google]
ரஜினிக்கு பிரதீப் கூறிய கதை பிடித்து போக சம்மதம் தெரிவித்து விட்டாராம். எனவே பிரதீப் -ரஜினி கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதி என்றே சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். இருவரும் இணையும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளாராம். முதன் முதலாக ரஜினி படத்திற்கு யுவன் இசையமைக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
